மீனவரின் வலையில் சிக்கிய திமிங்கிலம்!

புதன் ஜூன் 12, 2019

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற் கரையில் பெரிய திமிங்கிலம் ஒன்று மீனவரின் வலையில் சிக்கியுள்ளது.

கரைவலைத் தொழிலில் ஈடுபட்ட மீனவரின் வலையிலேயே திமிங்கிலம் சிக்கியுள்ளது.குறித்த திமிங்கிலத்தை மீனவர்கள் வலையிலிருந்து அகற்றிப் பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.