மிக வேகமாக குறைந்து வரும் நந்திக்கடல் ஏரி!!

சனி மார்ச் 16, 2019

முல்லைத்தீவில் அண்மை நாட்களாக தொடரும் அதிக வெப்பநிலை காரணமாக நந்திக்கடல் ஏரியின் நீர்மட்டம் மிக வேகமாக குறைவடைந்து செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கடும் மழை காரணமாக நந்நிதிக்கடலின் நீர்மட்டம் அதிகரித்து நந்திதிக்கடல் இயற்கையாகவே பெருங்கடலுடன் சங்கமித்திருந்தது.

111

இந்நிலையில், தற்பொழுது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பெருங்கடலுடனான நந்நிதிக்கடல் நீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனால் பெருங்கடலில் இருந்து நந்திக்கடல் ஏரிக்குள் வரும் கடல்வாழ் உயிரினங்களின் வருகை தடைப்பட்டுள்ளதுடன் நத்திக்கடலில் வாழும் கடல்வாழ் உயிரினங்கள் அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.