மிளகாயின் காரத்தை துல்லியமாக அளக்கும் கருவி!!

புதன் நவம்பர் 04, 2020

ஒவ்வொருவருக்கும் மிளகாயின் காரம் தாங்கும் திறன் மாறுபடும்.அதே போல ஒவ்வொரு மிளகாயின் காரத் தன்மையும் மாறுபடும். இவற்றை துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது உணவகங்கள், காய்கறி மண்டிகள் போன்றவற்றின் கடமை..

ஆனால், இதற்கென்று ஒரு கையடக்க சாதனம் இதுவரை இல்லாமல் இருந்தது. அந்த குறையை போக்க வந்திருக்கிறது சிலிகா-போட் (Chilica-Pod).தாய்லாந்தின் சோங்க்லா இளவரசர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள சிலிகா-போட், மொபைல் செயலி மற்றும் ஒரு சிறிய துணை கருவியின் உதவியுடன், எந்த மிளகாயின் காரத் திறனையும் சில நொடிகளில் சொல்லிவிடும்.

கிராபீன் மன்றும் நைட்ரஜன் அணுக்கள் பூசப்பட்ட ஒரு சிறிய உணரியை,மொபைல் போனுடன் இணைத்துவிடவேண்டும்.

பிறகு எத்தனாலில் மிளகாயை கரைத்து ஒரு காகிதத்தில் நனைத்து, பிறகு உணரியின் மீது வைக்கவேண்டும்.

கிராபீன் மற்றும் நைட்ரஜன் மீது மிளகாய் நிகழ்த்தும் தாக்குதல், லேசான மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

இதை வைத்து ஒரு மிளகாயின் காரத்தை துல்லியமாக அளக்கலாம் என தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துஉள்ளனர்.