மின்கட்டணம் ​தொடர்பான அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு

செவ்வாய் ஜூலை 07, 2020

கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில், மின்சார பட்டியல் அதிகரித்துள்ளமை தொடர்பில், பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து, ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது, மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டமைத் தொடர்பில் ஆராயவே, ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழு மின்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையொன்றை அமைச்சரிடம் கையளித்துள்ளதுடன், இதில் மின்கட்டணத்துக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை, நாளை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.