மிதக்கும் திரையரங்கினை அறிமுகப்படுத்தவுள்ள பிரான்சு!

திங்கள் ஜூலை 13, 2020

பிரான்சு: பாரீசு நகரில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் படகுகளில் இருந்து மக்கள் பார்வையிடக்கூடியவாறு மிதக்கும் திரையரங்கொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பாரீசு நகரில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் புகழ்பெற்ற  சென் (Seine) ஆற்றின் நடுவே தற்காலிக கடற்கரை உருவாக்கப்பட்டு பிளேஜஸ்(Plages) என்ற நிகழ்ச்சி கொண்டாடப்படும்.

இந் நிலையில் இம்முறை குறித்த பிளேஜஸ் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக சென் ஆற்றின் நடுவில் ‘சுர் எல்‘ எனப்படும் மிதக்கும் திரையரங்கொன்றை எதிர்வரும் 18 ஆம் திகதி பிரான்சு அறிமுகப்படுத்தவுள்ளது.