மியான்மரிகளை நாடுகடத்தும் நடவடிக்கையில் ரோஹிங்கியாக்கள் உள்ளடக்கப்படவில்லை

சனி பெப்ரவரி 20, 2021

வரும் பிப்ரவரி 23ம் தேதி மலேசியாவிலிருந்து மியான்மருக்கு மேற்கொள்ளப்படும் மியான்மரிகளை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஐ.நா. அகதிகள் அடையாள அட்டைக் கொண்டவர்களோ அல்லது ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்தவர்களோ எவரும் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படவில்லை. 

வழக்கமாக மலேசிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள குடியேறிகளை நாடுகடத்தும் அங்கமாகவே மியான்மரிகளை நாடுகடத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது என குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் கைரூல் டஸ்மி தெரிவித்துள்ளார். 

முன்னதாக, மியான்மரில் ஜனநாயக அரசு களைக்கப்பட்டு ராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ள நிலையில்,  மலேசியாவின் பிடியில் உள்ள 1,200 மியான்மர் நாட்டவர்களை நாடுகடத்த மலேசிய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த நிலையில் மலேசியாவில் தஞ்சம் கோரிய அகதிகளாக உள்ள எவரையும் மியான்மருக்கு நாடுகடத்தக் கூடாது என ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்திருந்தது. 

மலேசியா குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள மியான்மர் நாட்டவர்களை அழைத்துக் கொள்ள 3 கடற்படை கப்பல்களை அனுப்புவதாக மியான்மர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மலேசியா இவர்களை ஒப்படைக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இன்றைய நிலையில், மலேசியாவில் மியான்மரைச் சேர்ந்த 154,000 தஞ்சக்கோரிக்கையாளர்கள் வில தங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.