மியன்மாரில் நிலச் சுரங்கத்தில் மண்சரிவு

வியாழன் ஜூலை 02, 2020

மியன்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 113 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவமானது கச்சின் மாநிலத்தின் ஹபகாந் பகுதியிலுள்ள உள்ள ஜேட் சுரங்கத்தில் இன்று ஏற்பட்டுள்ளது.

இதுவரையில் 113 இறந்தவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணிகளில் அந்நாட்டு தீயணைப்புப்படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.