மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை

திங்கள் ஜூலை 13, 2020

கந்தக்காடு சேனபுர புனர்வாழ்வு நிலையங்களில் 428 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில்ஜசிங்க பொதுமக்களை பதட்டமடையவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 கொவிட்19 நோயாளிகளை இனம் காண்பதற்கான புலனாய்வு நடவடிக்கைகள் நாடாளாவிய ரீதியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் வைரஸ் நாடாளாவிய ரீதியில் பரவியுள்ளது அல்லது இரண்டாம் சுற்று பரவல் ஆரம்பித்துள்ளது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கும் அதேவேளை துரதிஸ்டவசமாக மக்கள் மத்தியில் அலட்சியத்தினை அவதானித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.