மக்கள் செல்வியாக மாறிய வரலட்சுமி!

செவ்வாய் மார்ச் 05, 2019

தமிழில் பல படங்களில்  நடித்து வரும் வரலட்சுமிக்கு டேனி படக்குழுவினர் மக்கள் செல்வி என்ற பட்டம் வழங்கி இருக்கிறார்கள்.

சர்கார், சண்டக்கோழி-2 படங்களில் வில்லி வேடத்தில் நடித்த வரலட்சுமி தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் முதன்மை வேடத்தில் நடிக்கும் டேனி படத்தை சந்தானமூர்த்தி இயக்குகிறார்.

படம் பற்றி அவர் அளித்த பேட்டியில் ‘இந்த படம் தஞ்சாவூர் பகுதியில் நடக்கும் தொடர் கொலைகள் பற்றிய விசாரணை அடிப்படையில் அமைந்த கதையாகும். வரலட்சுமி காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடிக்கிறது.

காவல் துறை  மோப்ப நாயான அதன் பெயர் தான் டேனி. படத்தை பிஜி.முத்தையா தயாரிக்கிறார்.

 

 

வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி நடிக்கிறார்கள். தஞ்சை பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது வரலட்சுமியை அவர்கள் வீட்டு பெண் போல பழகினார்கள். அவர் தொடங்கிய சேவ் சக்தி அமைப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே அவர் பெயருக்கு முன்னால் மக்கள் செல்வி என்ற தலையங்கத்தை  பயன்படுத்தி இருக்கிறோம்’ என்றார். வரலட்சுமியின் பிறந்தநாளான இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.