மக்களால் தோற்கடிக்கப்பட்டார் சுமந்திரன்? அவரை மீண்டும் கொண்டுவர முயற்சி...!

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தராகத் தம்மை அடையாளப்படுத்தி தமிழினத் துரோகத்தில் ஈடுபட்டு வந்த எம்,ஏ. சுமந்திரன் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அவரை மோசடியான முறையில் மீண்டும் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

கூட்டமைப்புக்கு மக்கள் அளித்த விருப்பு வாக்குகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட சி.சிறிதரன் முதலாவது இடத்திலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி திருமதி சசிகலா இரண்டாவது இடத்திலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

sasikala

இதில் திருமதி சசிகலாவை மோசடி முறையில் முறையில் புறந்தள்ளிவிட்டு தமிழினத் துரோகி சுமந்திரனைக் கொண்டுவருவதற்கு முயற்சி செய்யப்பட்டு வருகின்றது என யாழ். மத்திய கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படும் நிலையத்தில் உள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சுமந்திரன் நேரடியாக வாக்குகள் எண்ணும் நிலையத்திற்கு சென்று விருப்பு வாக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சியெடுத்து வருகின்றார் என தெரியவந்துள்ளது. 

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் மாவட்ட செயலக வாக்குகள் எண்ணும் இடத்தில் நிற்கின்றார் எனவும் அவர் சுமந்திரனின் தீவீர ஆதரவாளர் எனவும் தெரியவருகின்றது. 

இவ்வாறான நிலையில், மக்களின் தீர்ப்புக்கு மாறாக ஏதாவது இடம்பெற்றுவிடுமா என்பது தொடர்பாக அங்கு பரபரப்பு நிலை காணப்படுகின்றது. 

இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக திருமதி சசிகலா ரவிராஜ் தமது முகப்புத்தகத்தில் பதிவொன்றை தரவேற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக சசிகலாவிற்கு வாக்களித்த தென்மராட்சி மக்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.