மக்களின் பாவனைக்கேற்றால் போன்று சேவைகள் திருப்திகரமானதாக இல்லை

செவ்வாய் பெப்ரவரி 12, 2019

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரதேச தினக்கூட்டம் இன்று 12.2.2019 பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றமையினை குறிப்பிடலாம்.

இதன்போது பிரதானமாக மண்முனை பிரதான வீதி, அம்பிளாந்துறை பாதை சேவை தொடர்பிலும் முழுப்பொறுப்பும் வீதி அபிவிருத்தி திணைக்களம் பொறுப்பு கூற வேண்டுமெனவும் மக்களின் பாவனைக்கேற்றால் போன்று இரண்டு சேவைகளையும் திருப்திகரமானதாக செய்யமுடியாதெனின் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு பொறுப்பளிக்குமாறு கேட்கப்பட்டது.

கடந்தகால செயற்பாடுகள் போன்று இல்லாமல் சட்ட ரீதியாக ஒத்துழைப்புக்களை வழங்குவதாக கொக்கட்டிச்சோலை காவல்துறைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள பொறுப்பதிகாரி M.I.A வஹாப் தெரிவித்தார்.