மலையகப் பகுதியில் நில நடுக்கம் !

சனி மார்ச் 16, 2019

இன்று (16) காலை மலையகத்தில் சில பகுதிகளில் சிறிதளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை,வெலிமடை,  ஹாலி- எல, பச்சறை, நுவரெலியா,  ஹக்கலை பகுதியில் இன்று காலை 8.15 மணி முதல்  8.30 மணிவரை சிறிதளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது