மலையகத்தில் பால்மா வகைகளுக்கு தட்டுபாடு !

சனி மார்ச் 16, 2019

மத்திய மலைநாட்டு பகுதியில், பால்மா வகைகளுக்கான தட்டுபாடு நிலவிவருவதனால் குழந்தைகள் உட்பட அனைத்து பாவனையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

நாளந்தம், குழந்தைகளுக்கும், மற்றும் தேனீருக்காக பயன்படுத்தும் அனைத்து ரக பால்மாவகைகளுக்கும் தட்டுபாடு நிலவி வருகின்றது.

இருந்தபோதும் மொத்த வியாபாரிகள் அனைத்து பால்மாவகைகளையும் பண்டகசாலைகளில்; வைத்துள்ளனர் என்பதை அறிந்திருந்தும் அதுதொடர்பில் பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. 

விலையை அதிகரிப்பதற்காகவே இவ்வாறு பால்மா வகைகளுக்கான தட்டுபாட்டை ஏற்படுத்தியுள்ளதாக  மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.