மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகள் கைது

வியாழன் டிசம்பர் 31, 2020

மலேசியாவின் Kampung Sungai Serdang, Kapar பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இந்தோனேசியா மற்றும் மியான்மரை சேர்ந்த ஏழு சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதில் 4 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“கைது செய்யப்பட்ட அனைவரிடமும் முறையான பயண ஆவணங்கள் இல்லை. இதில் கைதான மூன்றான பெண்களும் சமீபத்தில் மலேசியாவுக்கு படகில் வந்ததாக ஒப்புக் கொண்டிருக்கின்றனர்,” என பொது நடவடிக்கைகள் படையின் கட்டளை அதிகாரி ரிஸல் முகமது தெரிவித்திருக்கிறார்.