மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 17 பேர் கைது!

புதன் சனவரி 29, 2020

மலேசியாவின் சாபா மாநிலத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 17 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆப்ரேஷன் Gasak என்ற இத்தேடுதல் வேட்டையில் மலேசியாவின் பல்வேறு பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

575 பேர் பரிசோதிக்கப்பட்டதில் முறையான ஆவணங்களின்றி இருந்ததாக கருதப்பட்ட 13 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உள்ளிட்ட 17 பேர் கைதாகியுள்ளனர். இவர்கள் Tawau என்ற பகுதியில் உள்ள தற்காலிக தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.