மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது

புதன் அக்டோபர் 28, 2020

மலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக பேசுகையில், “நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயல்பவர்களுக்கு எதிராக மலேசிய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.  எல்லைகளில் குறிப்பாக சட்டவிரோத பாதைகளில் மலேசிய அமலாக்க முகமைகள் தொடர்ந்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும்,” எனத்  தெரிவித்துள்ளார் மலேசியாவின் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப். 

அதே சமயம், மலேசியாவின் Pekan Nanas குடிவரவுத் தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த 5 சட்டவிரோத குடியேறிகள் அங்கிருந்து தப்பித்துச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இவர்கள் மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த நிலையில் தப்பிச்சென்றிருக்கின்றனர்.