மலேசியாவில்: இந்தியர் உட்பட 31 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

வியாழன் ஜூலை 29, 2021

 மலேசியாவின் Negeri Sembilan மாநிலத்தில் Senawang தொழிற்பேட்டையில் உள்ள கையுறைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் முறையான ஆவணங்களின்றி இருந்த 31 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த 31 பேரில் 30 பேர் வங்கதேசிகள் மற்றும் ஒருவர் இந்தியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் மலேசிய குடிவரவு சட்டத்திற்கு புறம்பாக மலேசியாவில் தங்கியிருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த தொழிற்சாலையில் நேபாளிகள், மியான்மரிகள் என 245 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.  தற்போது கைதான அனைவரும் Lenggeng குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.