மலேசியாவில் தொடரும் தேடுதல் நடவடிக்கை

சனி ஓகஸ்ட் 01, 2020

கடந்த மே 1 முதல் ஜூலை 28 வரை, மலேசியாவில் Op Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 2,491 வெளிநாட்டினர், 596 படகோட்டிகள், 144 ஆட்கடத்தல்காரர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார் மலேசிய மூத்த அமைச்சர்(பாதுகாப்புப் பிரிவு) இஸ்மாயில் சப்ரி யாகூப். 

“இதில் 96 படகுகளும் 257 வாகனங்களுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மலேசியாவுக்குள் சட்டவிரோத குடியேறிகள் நுழைவதைத் தடுக்க நாடெங்கும் 62 சாலைத்தடுப்புகள் மூலம் 28,589 வாகனங்களை காவல்துறையினர் பரிசோதித்துள்ளனர்,” என யாகூப் குறிப்பிட்டிருக்கிறார். 

அதே போல், இந்நடவடிக்கையினால் மலேசியாவுக்குள் நுழைய 257 குடியேறிகளும் 257 குடியேறிகள், எல்லைக்குள் நுழைய முயன்ற 37 படகுகளும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 

அத்துடன், 2,174 மலேசிய நாட்டவர்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியுள்ளதாகவும் அவர்கள் Kuala Lumpur, Negeri Sembilan, Penang, Kelantan, Sarawak, Johor ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் மையங்களில் வைகப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.