மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற சட்டவிரோத குடியேறிகள்

புதன் ஜூலை 29, 2020

மலேசியாவிலிருந்து வெளியேற முயன்ற சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 13 பேரை Semenyih பொது நடவடிக்கைகள் படை (GOF) கைது செய்துள்ளது. இவர்கள் மலேசியாவின் Ladang Tumbok, Tanjong Sepat பகுதியிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்றதாகக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், இதில் கைது செய்யப்பட்டவர்கள் எந்த நாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படவில்லை. 

இந்நடவடிக்கையின் தொடச்சியாக ஓர் உள்ளூர் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார் GOF 4வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி Zulafendy Hassan. 

“இந்நடவடிக்கையின் போது 3 பெண்கள் உள்பட 13 சட்டவிரோத குடியேறிகளையும் ஒரு மலேசிய நபரையும் சிறைப்படுத்தியுள்ளோம். முதல் கட்ட விசாரணையில், மலேசிய நபர் குடியேறிகளை அழைத்துச் செல்லும் படகோட்டியாக அறியப்பட்டிருக்கிறார்,” என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆட்கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.