மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசியர்கள் கைது

வியாழன் ஏப்ரல் 08, 2021

 மலேசியாவின் Johor மாநிலத்தில் உள்ள Pontian மாவட்டத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 6 சட்டவிரோத குடியேறிகளும் அவர்களை அழைத்து வந்த ஒரு படகோட்டியும் படகோட்டியின் 2 உதவியாளர்களும் மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சந்தேக நபர்கள் Pontian மாவட்ட காவல்துறையுடனான கூட்டு நடவடிகையில் சிறைப்படுத்தப்பட்டனர் எனக் கூறியிருக்கிறார் கடலோரக் காவல்படையின் உதவி ஆணையர் தளபதி Zailani Abdullah தெரிவித்திருக்கிறார். 

சட்டவிரோத குடியேறிகளை மலேசியாவுக்குள் கொண்டு வரும் முயற்சி நடப்பதாக பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், 

Pantai Sungai Kuali கரைப்பகுதிகளை கூட்டுப்படையினர் சோதனையிட்டதாக அவர் கூறியிருக்கிறார். 

“சோதனையின் போது, உள்ளூர் படகோட்டி ஒருவரையும் அவரது உதவியாளர்கள் இருவரையும் 6 இந்தோனேசியர்களையும் சிறைப்படுத்தினோம்,” எனக் கூறியுள்ளார் Zailani Abdullah. 

இதில் கைதானவர்களில் 5 பேர் ஆண்கள் ஒருவர் பெண் என காவல் படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை அழைத்து வந்த படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பெருந்தொற்று சூழலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சட்டவிரோத குடியேறிகளின் வருகையைத் தடுக்கும் விதமாக Johor மாநில கடல் எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.