மனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி!

சனி சனவரி 25, 2020

.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் நபர் ஒருவர் மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு மனைவியின் உறவினரான யுவதியொருவரை வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்ய முற்பட்ட  சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 இன்று (25.01.2020) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 
 இச்சம்வத்தின்  போது சுகந்தன் சகுந்தலா வயது 25 என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிழிந்துள்ளதோடு, அவரின் உறவினரான அண்மையில் அரச நியமனம் பெற்ற பட்டதாரி யுவதி காயமடைந்துள்ளார்.
 
 அத்தோடு குறித்த நபர் தன்னை தானே கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்யத நிலையில் அவரும் யுவதியும் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிசை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
 கடந்த சில மாதங்களாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வாழ்ந்த வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ; தர்மபுரம்   காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.