மஞ்சள் - கஞ்சாவுடன் நால்வர் கைது

செவ்வாய் செப்டம்பர் 15, 2020

மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 52 கிலோகிராம் கேளர கஞ்சா மற்றும் கடத்தப்பட்ட 920 கிலோகிராம் மஞ்சள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், 17 இலட்சம் ரூபாய், 100 அமெரிக்க டொலர் 5 நாணயத்தாள்கள், உழவு இயந்திரம், லொறி ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மன்னார் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.