மணிப்பூரில் கனமழை!

திங்கள் ஏப்ரல் 15, 2019

மணிப்பூர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை புயலாக வலுவடைந்தது. புயலில் சிக்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மணிப்பூரில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதிலும் சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது.

கனமழையால் அங்கு புயல் உருவாகியுள்ளது.  இந்த புயலின் தாக்கத்தால் அங்கு காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் வீடுகளின் மேற்கூரைகள், சாலைகளில் வைக்கப்பட்டு உள்ள விளம்பர பலகைகள் பறந்து கீழே விழுந்தன.

இந்நிலையில், மணிப்பூரின் காக்சிங் மற்றும் சுரா சந்த்பூர் மாவட்டங்களில் புயல் தாக்கியதில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாநிலம் முழுவதிலும் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநில அரசு மழையில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.