மனித நேய ஈருருளிப்பயணம் 4ம் நாளாக 340Km தொலைவு கடந்து பெல்சியம் நாட்டிற்குள் பிரவேசித்தது

திங்கள் செப்டம்பர் 06, 2021

 நேற்று  காலை 05.09.2021 பிரேடா ,நெதர்லாந்து மாநகரசபையில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி மற்றும் தமிழீழமே தமிழர்களுடைய நிரந்த தீர்வு என எழுச்சியோடு மனித நேய செயற்பாட்டாளர்கள் தம் பயணத்தை தொடர்ந்தார்கள்.

l

 மேலும் நெதர்லாந்து கிளைப்பொறுப்பாளர் திரு ஜெயா அண்ணையும் வருகை தந்து பயணத்தினை ஆரம்பித்து வைத்தார்.  நெடுந்தூரப் பயணத்திற்கு பின்னர் நெதர்லாந்து மற்றும் பெல்சிய எல்லைகளில் இரு நாட்டு கிளைப் பொறுப்பாளர்களின் சம்பிரதாய பூர்வமாக வாழிட நாட்டு தேசியக்கொடி பரிமாறப்பட்டதும் உணர்வு மிக்க தமிழ் மக்களின் வரவேற்போடு எம் அறவழிப்போராட்டம் அன்வேர்ப்பன், பெல்சியம் மாநகரசபையில் வந்தடைந்து பெரும் எழுச்சியாக தமிழர்களுடைய தாரக மந்திரத்தோடு நிறைவு பெற்று நாளை மீண்டும் பெல்சியத் தலை நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொள்ள இருக்கின்றது. 

“எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும் “

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். 

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.