மனித நேய ஈருருளிப்பயணம் யெனிவாவை வந்தடைந்தது!

திங்கள் மார்ச் 04, 2019

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி     புருசல் மாநகரில் ஆரம்பித்த  ஈருருளிப்பயணம் தொடர்ச்சியாக 03/03/2019 இன்று காலை  லுசான் மாநகரிலிருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயணம்  மாலை 18.00மணியளவில் சுவிஸ் ஜெனிவா  மாநகரத்திலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலுக்கு வந்தடைந்துவிட்டது.

எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால்,ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக நாளைய தினம்  4 ஆம் திகதி யெனீவா சர்வதேச முச்சந்தியில் முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தாயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.