மனித தோலை அச்சடிக்க முடியும்!

திங்கள் நவம்பர் 11, 2019

முப்பரிமாண அச்சியந்திரத்துறையில், மருத்துவர்களுக்கு உதவும் உயிரி முப்பரிமாண அச்சு தொழில்நுட்ப ஆராய்ச்சி வேகமெடுத்திருக்கிறது.

மனித தோல் செல்களை எடுத்து, ஆய்வகத்தில் வைத்து வளர்த்து, 'பயோ இங்க்' எனப்படும், 'உயிரி மை' தயாரிக்கப்படுகிறது.

இந்த மையினை வைத்து, '3டி முப்பரிமாண அச்சியந்திரம்' எனப்படும் உயிரி முப்பரிமாண அச்சியந்திரத்தில் கொடுத்து, வேண்டிய பரப்பளவுக்கு மனித தோலை அச்சடிக்க முடியும்.

ஆனால், அச்சடிக்கப்பட்ட மனித தோலில் ரத்த நாளங்கள் இல்லை என்பதால், செல்கள் சீக்கிரமே இறந்துவிடுகின்றன.

இந்தக் குறைய போக்க, நியூயார்க்கிலுள்ள ரென்செலயர் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டின் விஞ்ஞானிகள், புதிய யுக்தியை கண்டறிந்துள்ளனர்.

தோலின் ரத்த நாளங்களில் உள்ள செல்களையும் தனியே எடுத்து, உயிரி மையில் கலந்து அச்சிட்டனர்.

இந்த புதிய தோல், ஆய்வக சோதனைகளில், இயல்பாக உள்ள ரத்த நாளங்களுடன் இணைத்து வளரவும், ரத்தத்தை பெறவும், அனுப்பவும் செய்தன.

எலி சோதனையில் கிடைத்த இந்த வெற்றி முக்கியமானது என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.