மனிதகுலம் துயரத்திலிருந்து விடுபடட்டும்!

சனி ஏப்ரல் 11, 2020

அன்பையும், கருணையையும், தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் மனிதநேயத்தையும் போதித்த இயேசு கிறிஸ்து பிலாத்து சபையில் நிந்தைக்கு ஆளாகி, சிலுவையைச் சுமந்து, கொல்கதாவில் சிலுவையில் அறையப்பட்டார்.


மூன்றாம் நாள் இயேசுநாதர் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக் கிழமை புனித ஈஸ்டர் திருநாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததைப் போல, இன்றைக்கு உலகெங்கும் வாழும் மனித சமுதாயத்தைக் கலங்கடித்து, உயிர்களைச் சூறையாடிக்கொண்டிருக்கும் கோவிட்-19 கொரோனா ரைவஸ் கொள்ளை நோயிலிருந்து மனிதகுலம் பாதுகாக்கப்பட தங்களையே அர்ப்பணித்துக்கொண்டு சேவை செய்யும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள், மனிதநேயத்தோடு உதவி புரிவோர் அனைவரின் முயற்சிகளும் வெற்றி பெற்று ஈஸ்டர் பண்டிகை அன்று எழுந்த மகிழ்ச்சியைப் போல மனிதகுலம் துயரத்திலிருந்து விடுபடட்டும் என்று ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை கிறிஸ்தவப் பெருமக்களுக்குத் தெரித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
11.04.2020