மணித்தியாலத்தில் அளிக்கக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கை 200!

வியாழன் நவம்பர் 14, 2019

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மணித்தியாலமொன்றில் 200 வாக்குகளை மாத்திரமே அளிக்க முடியும் என, தேர்தல்கள் கண்காணிப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

வாக்குச்சீட்டின் அதிக நீளம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர் ஒருவருக்கு வாக்களிக்க எடுக்கும் நேரத்தை கணிப்பிட்டு இது தொடர்பான  தகவலை தேர்த்ல்கள் கண்காணிப்பு சங்கம் வெளியிட்டுள்ளது.

எனவே, ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று (16) முடிந்தளவு நேரகாலத்துடன் சென்று வாக்களிப்பதே மிகவும் சிறந்தது என, அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

வாக்குச்சீட்டின் அதிக நீளம் காரணமாக இம்முறை காலை 7 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.