மன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது !

புதன் மே 22, 2019

மன்னார் சௌத்பார்புகையிரத  வீதி பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று (21) செவ்வாய்க்கிழமை இரவு மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையின்   கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் காவல் துறைக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில்,மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை  விரைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது நேற்று இரவு 10 மணியளவில் மன்னார் சௌத்பார் ரயில் வீதி பகுதியில் வைத்து 923 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த ஆண்,பெண் உள்ளடங்கலாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மன்னார் காவல் துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர்.