மண்ணெண்ணெய் விநியோகத்தில் மட்டுப்பாடு

ஞாயிறு மே 22, 2022

எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணெய் விநியோகத்தில் இடம்பெறும் மோசடியை குறைப்பதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.