மண்ணுரிமை காக்க அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் மக்கள் திரள் முற்றுகை போராட்டம்.

வியாழன் நவம்பர் 19, 2020

அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராம மக்களிடமிருந்து 35 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஏக்கரை வெறும் 2,300 ரூபாய்க்கு விலைபேசி வாங்கி வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருகிறோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து இதுவரை வேலையும் தராமல் பணி நிரந்தரமும் செய்யாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசு சிமெண்ட் ஆலைக்கு எதிராக வருகின்ற 30.11.2020 திங்கள் கிழமை காலை 9 மணிக்கு பேரிடி பெரும் மழை என்றாலும் மக்கள் திரள் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும்.

அரியலூர் மண்ணின் மீதும் இயற்கையின் மீதும் எதிர்கால நம் தலைமுறையின் வாழ்வில் மீதும் பெரும் பற்று கொண்டவர்கள் அனைவரும் ஆனந்தவாடி கிராமத்தில் ஒன்று கூடுவோம் நம் தமிழ் இனத்தின் உரிமையை மீட்டெடுப்போம்.

எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்
எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும். வெல்வோம்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி
"சோழன் குடில்"
சென்னை.