மனோ - லக்ஷ்மன் கடும் வாக்­கு­வதாம்!

வியாழன் நவம்பர் 21, 2019

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அலரி மாளி­கையில் நேற்று நடை­பெற்ற அமைச்­சர்கள் மற்றும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் மனோ கணே­ச­னுக்கும் லக்ஷ்மன் கிரி­யெல்­ல­வுக்­கு­மி­டையில் கடும் வாக்­கு­வதாம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்தக் கூட்­டத்­தின்­போது ஐக்­கிய தேசியக் கட்சி கண்­டியில் தோல்வி அடைய மத்­திய அதி­வேக வீதி நிர்­மா­ணத்­தில் ஏற்­பட்ட தாம­தமே கார­ண­மென அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இத­னை­ய­டுத்து லக்ஷ்மன் கிரி­யெல்­லவின் கருத்தை நிரா­க­ரித்த அமைச்சர் மனோ கணேசன், மத்­திய அதி­வேக வீதி நிர்­மாண தாமதம் தோல்­விக்குக் கார­ண­மல்ல என்றும் நீங்கள் கண்­டியில் தேர்தல் பிர­சாரப் பணி­களில் முறை­யாக ஈடு­ப­டா­தது தோல்­விக்கு காரணம் என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

இத­னை­ய­டுத்து இரண்டு பேருக்­கு­மி­டையில் கடும் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. தான் கண்டி மாவட்­டத்தில் அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் ஒழுங்­கான முறையில் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்த­தா­கவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­தி­ருக்­கிறார்.

எனினும் தேர்தல் முடி­வு­களின் பின்னர் மலை­யகப் பகு­தி­களில் தமிழ் மக்கள் தாக்­கப்­ப­டு­வ­தா­கவும் அது குறித்தும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் மனோ கணேசன் இதன்­போது தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இதே­வேளை தோட்­டப்­ப­கு­தி­களில் தமி­ழர்கள் தாக்­கப்­ப­டு­வது தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற அனுமதிக்கக் கூடாது என்றும் அமைச்சர் மனோ கணேசன் இந்தக் கூட்டத்தின்போது வலியு றுத்தியிருக்கிறார்.