மனோரஞ்சிதம் ( மனோக்கா) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு

வெள்ளி மார்ச் 19, 2021

பிரான்சு பாரிசில் கடந்த 13.03.2021 சாவடைந்த தமிழ்ப் பெண்கள் அமைப்பின் முன்னாள் பொறுப்பாளர் இசிடோரா மனோரஞ்சிதம் ( மனோக்கா) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு வில்த்தனுஸ் என்னும் இடத்தில் நடைபெற்றது.

m

காலை 10.00 மணிக்கு அவரின் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள தேவாலயத்தில் திருப்பலிப்பூசையும், அதனைத் தொடர்ந்து மதியம் 13.00 மணிக்கு உடல் தகனம் செய்யப்படும் மண்டபத்தில் பொது மக்களின் வணக்கத்திற்காக பூதவுடல் வைக்கப்பட்டது.

m

பிரான்சு மண்ணில் மக்கள் மனங்களில் தனது அளப்பரிய செயற்பாட்டால் இடம்பெற்ற மனோ அக்கா பற்றி தமிழர் கட்டமைப்புக்களும், கலைஞர்கள், பெண்கள், பெரியவர்கள், பேரப்பிள்ளைகள் போன்ற இளையவர்கள் தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

m

கோவிட் 19 வீரியம் பெற்று நிற்கின்ற வேளையில் அதற்காக சுயபாதுகாப்பினை கடைப்பிடித்து பல நூறு மக்கள் கலந்து கொண்டு மனோக்காவுக்கு தமது இறுதி கண்ணீர் வணக்கத்தை செலுத்தினர். பின்னர் புகழ்உடல் தகனம் செய்யப்பட்டது.