மனுக்கள் மீதான பரிசீலனைக்கான திகதி குறிப்பு!

செவ்வாய் செப்டம்பர் 10, 2019

வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய  சிறிலஙகா ஜனாதிபதி எடுத்த தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை பரிசீலனை செய்வதற்காக டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி அழைக்குமாறு உயர்நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது.

காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி மற்றும் மாற்று கொள்கை மையத்தினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் சிசிர த ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது.