மொஹமட் ஷாஃபி க்கு எதிரான முறைப்பாடுகளின் எண்ணிக்கை உயர்வு!

புதன் ஜூன் 12, 2019

குருநாகல் மாவட்ட போதனா வைத்தியசாலையின் வைத்தியதிகாரி மொஹமட் ஷாஃபி க்கு எதிரான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 943ஆக அதிகரித்துள்ளது.

குருநாகல் மற்றும் தம்புள்ளை ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளில், வைத்தியர் ஷாஃபியிடம் வைத்தியம் செய்துக்கொண்டதாக்கூறி, பெருமளவிலான தாய்மார்கள் தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.