மொழி என்ன பாத்திரத்தை வகிக்கிறது?

ஞாயிறு மார்ச் 31, 2019

எதிர்ப்பின் மூலோபாயங்களில் மொழி என்ன பாத்திரத்தை வகிக்கிறது? பேர்லினில் நடைபெற்ற  கருத்தரங்கு

ஒதுக்கப்படும்  மற்றும் அழிக்கப்படும் 

மொழிகளை பாதுகாக்க நாம் என்ன செய்கின்றோம்?

எமது சொந்த மொழியை பயன்பாட்டில் வைத்திருப்பதும் மற்றும் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறைக்கு பரிமாற்றம் செய்வதும் எந்த அளவிற்கு ஒரு எதிர்ப்பாக அல்லது பாதுகாப்பாக கருத முடியும்?

எமது மொழி எம்மை அடையாளப்படுத்த எவ்விதமாக அர்த்தப்படுகின்றது?

கடந்த  ‪21.03.2019‬ அன்று  ரோமானிய மொழி மற்றும் தமிழ் (ஈழம் தமிழ்) மொழிகள் தொடர்பான   கருத்தரங்கு RomaniPhen மற்றும் xart splitta அமைப்பினரால் நடைபெற்றது . இரு மொழிகளும் இன்றும் வலுவாக ஒதுக்கப்பட்டு , அதேபோல் அவைகளுக்கு களங்கம் விளைவிக்கப்படுகின்றது.

இக் கருத்தரங்கில் எமது தமிழாலய ஆசிரியை திருமதி காருண்யா விஎக்சோரெக் அவர்களும்  பேச்சாளராக கலந்துகொண்டு புலம்பெயர் தேசத்தில் தாய்மொழியில் கற்பது மற்றும் நடைமுறையில் அந்த மொழியை பேசுவதின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கமாக உரையாற்றினார். தமது மொழியின் இருப்பின் அவசியத்தை கருத்தில் கொண்டு புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்கள் கடந்த 30 வருடங்களாக  தமது சொந்த முயற்சியால் தமிழ் மொழியை தொடர்ந்து தமது பிள்ளைகளுக்கு ஊட்டுவதிற்கும் தமது பாண்பாட்டை  பேணுவத்திற்கும் கடும் முயற்சியை எடுத்ததை அடையாளப்படுத்தி காண்பித்தார்.சமநேரத்தில் புலம்பெயர் தேசத்தில் தமது மொழியை 3 ஆம் தலைமுறையிடம் கொண்டுசெல்ல இருக்கக்கூடிய சவால்களை பற்றியும் சுட்டிக்காட்டினார்.

காருண்யா விஎக்சோரெக், MA (IEP Paris), MSc (LSE) அவர்கள் பேர்லினில் (FU), பாரிஸ் மற்றும் லண்டன் (LSE) ஆகிய நகரங்களில் பிரான்சு-ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய ஆய்வுகளில் முதுகலை பட்டதாரியாக திகழ்வதோடு மேலும் தமிழில் மற்றும் கர்நாடக இசை ஆகியவற்றில் டிப்ளமோ பெற்றார். காருண்யா விஎக்சோரெக் அவர்கள் பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயத்தில் ஆசிரியையாக சேவை ஆற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களுக்கு தமிழ் என்பது ஒரு மொழி என்பதை தாண்டி அது அவர்களின் இன, பண்பாட்டு, அரசியலின்     அடையாளமாகவும் , முகம் கொடுக்கும் இனவழிப்பிற்கு  எதிரான  ஆயுதமாகவும்  இருக்கிறது என்பதை இவ்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் மொழி ஆர்வாளர் ஒருவரும்   தெளிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.