மொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரையாவதா?

புதன் நவம்பர் 13, 2019

மொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா? அல்­லது அன்­னத்­திற்கு வாக்­க­ளித்து அன்­ன­முண்டு அழ­காக வாழப்­போ­கி­றீர்­களா? நீங்­களே முடி­வெ­டுங்கள் என்று அம்­பாறை மாவட்ட முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் நேற்று விநா­ய­க­பு­ரத்தில் நடை­பெற்ற  மக்கள் சந்­திப்பில் உரை­யாற்­று­கையில் மேற்கண்டவாறு கேள்வி எழுப்­பினார்.

புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்து நடை­பெற்ற சந்­திப்பில் அவர்­ மேலும் கூறி­ய­தா­வது,

வெள்­ளைவான் சாரதி கூறிய கருத்­துக்­க­ளைக் ­கேட்­கும்­போது இந்த உலகில் கம்­போ­டி­யாவை விட மிகவும் கொடூ­ர­மான சித்­தி­ர­வதை அட்­டூ­ழியம் நிறைந்த கொடூ­ரத்தை இலங்­கையில் செய்­தி­ருக்­கின்­றனர் என்­பதை அறி­ய­மு­டி­கி­றது. தெரிந்தே முத­லை­க­ளுக்கு 300 பேரை இரை­யாக்கினார். இது­போல்­ இன்னும்  எத்­தனை ஆயிரம் மக்­களை இவ்­வாறு கொன்று குவித்­துள்­ளார்­களோ தெரி­யாது. காணாமல் போன­வர்­களும் இதற்குள் உள்­ள­டக்­கமோ தெரி­யாது. அப்­ப­டிப்­ப­ட்ட­வர்­களை மீண்டும் ஆட்­சி­பீடத்தில் ஏற்­று­வது நல்­லதா? மீண்டும் கொடூ­ர­மான யுக­மொன்­றுக்கு நாங்­களே வழி­வ­குத்­த­வர்­க­ளாவோம்.

சஜித் ஜனா­தி­ப­தி­யானால், இந்த அழ­கான இலங்­கைத்­தீவு மனி­தா­பி­மா­ன­முள்ள ஊழ­லற்ற சர்­வா­தி­காரமற்ற குடும்ப ஆட்­சி­யற்ற சமா­தானம் நிலவும் புண்­ணிய பூமி­யாக மாறும். உண்­மையில் நல்­ல­தொ­ரு­ மாற்­றத்தை எதிர்­பார்க்­கலாம். அவர் தோற்றால் ஒட்­டு­மொத்த இலங்கையனும் தோற்­ற­தற்­கு சமன்.  மீண்டும் அடி­மைச் ­ச­மூகம் உரு­வாக வழி­வ­குக்கும். ஊழலும் அரா­ஜ­கமும் தலை­வி­ரித்­தாடும். அதா­வது மீண்டும் இருண்ட யுக­மொன்று உரு­வாகும். 1983களி­லி­ருந்து தமிழ்­மக்கள் பல யுத்­தங்­களைக் கண்­ட­வர்கள். துன்­பத்­துக்­குள்­ளாகி பல வலி­களை உணர்ந்­த­வர்கள். கிறீஸ் மனி­தன்­ யுகத்தை கண்­ட­வர்கள்.

சஜித் மனி­தா­பி­மா­னத்­துடன் அபி­வி­ருத்­தி­களை செய்யக்கூடியவர். தமிழர்கள் ஆயுதம் தூக்கியது உரிமைக்காக. பின்னர் உரிமை அரசியல் செய்தனர். இன்று உண்மையான தகுதியான தலைவரான சஜித்தை தெரிவுசெய்து தீர்வுக்கான பிள்ளையார் சுழியை இடுங்கள். வாழ்வு சிறக்கும் என்றார்.