மோடி-மகிந்த 26 ம் திகதி பேச்சுவார்த்தை

செவ்வாய் செப்டம்பர் 22, 2020

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் எதிர்வரும் 26ம் திகதி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர் என பிரதமர் அலுவலகத்தை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது இருநாடுகள் மத்தியிலான அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.

இருநாடுகள் மத்தியிலான ஏனைய பல விடயங்கள் குறித்தும் இலங்கை பிரதமரும் இந்திய பிரதமரும் பேச்சுக்களை மேற்கொள்வார்கள்.

இந்திய பிரதமருடனான பேச்சுவார்த்தைகளின் போது வடபகுதி மீனவர்கள் விவகாரம் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டுவார் என தெரிவித்துள்ள பிரதமர் அலுவலக வட்டாரங்கள் 25 ம் திகதி பிரதமர் மீனவர்கள் குழுவொன்றை சந்திப்பார் இந்த சந்திப்பின் போது இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி குறித்த தங்கள் கவலையை அவர்கள் பிரதமர் மகிந்த மகிந்த ராஜபக்சவிடம் முன்வைப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளன.