மோடி தமிழை சமீபகாலமாக உயர்த்தி பேசுவது தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்க்கு!

வியாழன் அக்டோபர் 03, 2019

கிராமப்புற மக்களுக்கு மக்கும் தன்மையுடன் கூடிய சானிடரி நாப்கின்கள் உபயோகம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சி கமல்ஹாசன் பேசியதாவது:-பிக்பாஸ் சமுதாயத்திற்கு தேவையில்லாத நிகழ்ச்சி என்றால் அரசும் அப்படித்தான் இருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களை நான் வியாபாரிகளாகத்தான் பார்க்கிறேன்.

பிரதமர் மோடி தமிழை சமீபகாலமாக உயர்த்தி பேசுவது தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்கான நோக்கிலேயே உள்ளது. எந்த ஊர் சென்றாலும் அந்த இடத்திற்கு ஏற்றார் போல் தொப்பி உள்ளிட்ட உடைகளை அணிந்து கொள்வது போல தமிழையும் ஒரு கருவியாக பிரதமர் மோடி பயன்படுத்துகிறார்.

தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற பல்வேறு பழம்பெரும் மொழிகள் அடங்கிய குடும்பத்தில் ஹிந்து டைப்பர் அணிந்த ஒரு கைக்குழந்தை.

நாம் அந்த இளமையான மொழியையும் கவனித்துக்கொள்ள வேண்டும், எனென்றால் ஹிந்தியும் நமது குழந்தைதான்.என அவர் கூறினார்.