மோதல் சம்பவத்தில் பெண்ணொருவர் தாக்கியதில் ஆண் உயிரிழப்பு!!

புதன் டிசம்பர் 08, 2021


நவகமுவ-ரனால பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பெண்ணொருவர் தாக்கியதில்,ஆண் உயிரிழந்துள்ளார்.

இருவரும் இரு மாதங்களுக்கு முன்னர் வாடகை வீட்டுக்கு வந்துள்ளதுடன் இருவரும் திருமணம் முடிக்காமல் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் நேற்று மாலை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து குறித்த பெண்ணுடன் முரண்பட்டதுடன் பெண்ணின் தலையை பொல்லால் தாக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து,பெண் தனது கையிலிருந்து கூரிய ஆயுதத்தால் தாக்கியபோது பலத்த காயங்களுக்குள்ளான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் காயங்ளுக்குள்ளான பெண் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.