மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

செவ்வாய் ஓகஸ்ட் 13, 2019

திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் இன்று (13) காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருடன் பயணித்த 19 வயதுடைய மற்ற மாணவர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தில் ஜின்னா நகரை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளனர்.

இவ் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்துள்ள நிலையில், எதிரே இருந்த கம்பி வேலியுடன் மோதியதால் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.