மோட்டார் சைக்கிளில் வந்த சிறீலங்கா பொலிஸார் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பியோட்டம்!

திங்கள் அக்டோபர் 14, 2019

வவுனியா–கண்டி வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸார் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பித்துச் சென்றுள்ள சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதியில் பயணித்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இவ் விபத்தின்போது இரு மோட்டார் சைக்கிலும் பகுதியளவில் சேதமடைந்ததுடன், எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளின் சாரதி ஒர் பொலிஸார் என தெரிவித்து விபத்துக்குள்ளான பெண் மோட்டார் சைக்கிள் சாவியினை பறிக்க முற்பட்டுள்ளார்.

சாவியினை வழங்க பெண் மறுத்த நிலையில் விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளின் சாரதி தான் பொலிஸ் நிலையத்திற்கு செல்வதாக தெரிவித்து அவரது மோட்டார் சைக்கிளினை அவ்விடத்திலிலேயே விட்டு சென்றாக விபத்தினை பார்வையிட்ட மக்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக விபத்துக்குள்ளான பெண் 119 அவசர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு மோட்டார் சைக்கிளினையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.