மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள காரியாலயம் திறப்பு

செவ்வாய் நவம்பர் 24, 2020

 மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்ட பிரதான காரியாலயம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என மோட்டார் வாகன போக்கு வரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் நாராஹேன்பிட்ட தலைமை அலுவலகம் இன்று முதல் வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் மீண்டும் திறக்கப்படும்.

முன்பதிவு அடிப்படையில் மாத்திரமே இந்த சேவை வழங் கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாய கம் சுமித் அழகக்கோன் விடுத்துள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, யாழ்ப்பாணம், அனுராதபுரம், குருணாகல், கம்பஹா மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்ட அலு வலகங்களிலிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் தெரிவித் துள்ளார்.