’மொட்டு தேர்தல் விஞ்ஞாபனம்’ ஒக்டோபர் வெளியிடப்படும்!

திங்கள் ஜூலை 15, 2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி கொழும்பில் வெளியிடப்படும் என, அந்தக் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்ளை அங்கத்தவர்களாக கொண்ட 29 குழுக்களின் ஊடாக தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் இந்த மாத இறுதியில் அவை நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனையடுத்து, எதிவரும் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் அவை பொதுமக்களின் விவாதத்துக்கு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.