மொயின் அலியிடம் இருந்தே புதிய கொரோனா சிறிலங்காவுக்கு வந்தது!

புதன் சனவரி 13, 2021

 சிறிலங்கா  வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் மொயின் அலியிடம் இருந்தே புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமானந்த ஹேரத் இன்று (13)  தெரிவித்தார். 

 முன்னதாக இன்று காலை ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. அது மொயின் அலியே என்பதை தற்போது அறிவித்துள்ளார்.

 சிறிலங்கா வந்த மறுநாளே (4ம் திகதி) மொயின் அலிக்கு தொற்று உறுதியானது. தற்போது அவருக்கான தனிமைப்படுத்தல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது