மருந்தாகும் கண்டங்கத்திரி!!

திங்கள் ஜூன் 15, 2020

கண்டங்கத்திரி தரிசு நிலங்கள்,திறந்தவெளி புதர்க்காடுகள் மற்றும் சாலையோரங்களில் இயல்பாக வளர்கின்றது.

இதன் இலை,பூ,காய்,விதை,பட்டை,வேர் போன்ற தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை.
இதனை வேருடன் பிடுங்கி எடுத்து வெயிலில் காய வைத்துவிட வேண்டும்.

நன்றாக காய்ந்ததும் இதனை பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.வேர், இலை பூ போன்றவை இருப்பது சிறப்பு.

இந்த பொடி ஆஸ்துமா நோயால் அவஸ்த்தை படுபவர்களுக்கு மிகவும் உதவுகிறது. குளித்த பின் சாம்பிராணி தட்டில் நெருப்பு எடுத்து அதில் இந்த பொடியில் சிறிதளவு போட்டு புகை வரும் போது சுவாசித்து வந்தால் ஆஸ்துமா நிரந்தரமாக நீங்குவிடும்.

அத்துடன் மூச்சுத் திணறல் போன்ற தொல்லைகளும் ஏற்படாது. அடுத்து கண்டங்கத்திரி பழங்களை காயவைத்து அதனை நெருப்பில் போட்டு சுட வேண்டும்.

ஓரளவு கறுப்பானதும் இதனை எடுத்து தூள் செய்ய வேண்டும்.
பின் ஆடாதோடை இலைகளை எடுத்து அதில் இந்த பொடியை போட்டு சிகரெட் போல் செய்துகொள்ள வேண்டும்.

இதன் புகையை இழுத்தால் பல் வலி,சொத்தை பல்,மற்றும் பல் சம்மந்தப் பட்ட நோய்கள் பறந்து ஓடிப் போகும்.

அதே போல் வெறி நாய் கடி உட்பட ஏராளமான நோய்களுக்கு இந்த கண்டங்கத்திரி உதவுகிறது.

கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு.

சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து “தசமூலம்” என்பதாகும். இது 10 மூலிகைகளின் வேர்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.

கண்டங்கத்திரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவப் பண்பு கொண்டுள்ளதாக உயர்நிலை ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கண்டங்கத்திரி முழுத்தாவரமும் கோழையகற்றும் சிறுநீர் பெருக்கும்; குடல்வாயு அகற்றும். கண்டங்கத்திரி வேர், சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.கண்டங்கத்திரி பழங்கள்,தொண்டை வறட்சி,மூச்சுக்குழல் அழற்சி,தலைவலி,காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும்.

கண்டங்கத்திரி இலையை எடுத்து நன்றாக இடித்து சாற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சம அலவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகம் உள்ளவர்கள் பூசிவர நாற்றம் முற்றிலும் நீங்கும்.

கண்டங்கத்திரி முழுத்தாவரத்தையும் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை,முள் நீக்கி காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர், தூள் செய்து கொள்ள வேண்டும். ½ தேக்கரண்டி தூளுடன் ½ தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழைத்து, உள்ளுக்குள் சாப்பிட ஆஸ்துமா, சுவாச நோய்கள், சளி ஆகிய நோய்கள் குணமாகும்.

கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி,நெருப்பில் சுட்டு,பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல்கூச்சம் என்பனவும் தீரும்.