மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டு!

ஞாயிறு மே 05, 2019

மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருட்களில் பூண்டு மிகவும் முக்கியமானது. பூண்டை நாம் உணவில் சேர்த்து கொள்வதால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

நீரிழிவு நோயால் உலகில் உள்ள பெரும்பாலானோர்கள் அவதிப்படுகின்றனர். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த எவ்வளவு மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகள் வந்துவிட்ட போதிலும் வீட்டிலேயே மிகவும் எளிமையாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் முறையை தெரிந்து கொள்ளுங்கள். மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருட்களில் பூண்டு மிகவும் முக்கியமானது. பூண்டை நாம் உணவில் சேர்த்து கொள்வதால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம். 

பூண்டில் அலிசின், அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட், சிஸ்டீன் சல்ஃபாக்சைடு ஆகியவை நிறைந்திருக்கிறது. இதில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிபங்கல் தன்மை இருப்பதால் உடல் இன்சுலின் சுரப்பிற்கு சரியாக எதிர்வினையாற்றும். தொடர்ச்சியாக பூண்டு உட்கொண்டு வந்தால் இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயை உண்டாக்கும் ஹோமோசிஸ்டின் என்னும் அமினோ அமிலத்தை குறைக்கும். 

மேலும் பூண்டில் குறைந்த அளவே கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன. பூண்டில் வைட்டமின் பி6 மற்றும் சி நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். 

தினமும் காலையில் பூண்டை சாப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்தி வரலாம். சில சமயங்களில் பூண்டை இப்படி சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி ஏற்படும். அதனால் பூண்டின் தோல் உறித்து தான் சாப்பிட வேண்டும். சிறு சிறு துண்டுகளாக வெட்டி சூப், சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். 

1. வாயுத்தொல்லைகளை நீக்குவதில், பூண்டு மிகவும் சிறந்தது. தினசரி ஒரு பூண்டை, தீயில் சுட்டு, மென்று வந்தால் வாயுத்தொல்லை முற்றிலும் நீங்கும். 

2. ரத்தத்தை சுத்தப்படுத்தி, புற்று நோய் மாதிரியான கொடிய நோய்களை, நம்மிடம் அண்ட விடாமல் தடுக்க செய்கிறது. 

3. இதயத்தில் சேரும் கொழுப்புகளை, பூண்டு கரைக்க செய்கிறது. 

4. முகப்பரு இருக்கும் இடத்தில பூண்டு சாறை தடவி வந்தால் பருக்கள் உடனே மறைந்துவிடும். 

5. நல்லெண்ணையில் 10 பல் பூண்டை சேர்த்து, சுண்ட காய்ச்சி ஆற வாய்த்த பின்பு, அந்த எண்ணெயை சிறிதளவு காதுகளில் விட்டால், காது வலி குணமடையும்.