மட்டக்களப்பில் உன்னிச்சைக் குளத்துக்கு அருகில் திருவள்ளுவர் சிலை திறந்துவைப்பு!

செவ்வாய் டிசம்பர் 03, 2019

மண்முனை மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சி.குகநாதனின் முயற்சியினால் அமைக்கப்பட்டு உன்னிச்சை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஆர்.விஜயரெட்ணம் தலைமையில்  இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

உன்னிச்சைகுளம் பகுதி சுற்றுலா மையமாக மாறிவரும் நிலையில் அங்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் வருகை தருவதனால் தமிழர்களின் அடையாளத்தினை வெளிப்படுத்தும் வகையில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.