மட்டக்களப்பு மாநகரசபையினரால் தொற்று நீக்கும் பணி

வெள்ளி ஏப்ரல் 03, 2020

பொதுச் சுகாதார நலன் கருதி மட்டக்களப்பு மாநகரசபையினரால் நகரில் மக்கள் கூடிய இடங்களில் தொற்று நீக்கும் பணி இன்று (03) தெளிக்கப்பட்டன.

m

வங்கிகள்,சமுர்த்தி வங்கி, புதூர் எரிபொருள் நிரப்பு நிலையம், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள், பொலிஸ் வாகனம், மாநகரசபையின் கழிவு முகாமைத்துவத்தில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் சமூகக் கட்டப்பாட்டு இடைவெளியை பேணும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக் சந்தைகள் உள்ளிட்டவற்றில் கிருமித் தொற்று அகற்றப்பட்டன.

m

இதேவேளை இருதயபுரத்தில் வியாழக்கிழமை நேற்று கொழும்பிலிருந்து வந்த நபர் பொலிசார் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளமையினால் குறித்த நபர் தங்கியுள்ள வீடு வளாகம் உள்ளிட்ட பிரதேசம் தொற்று நீக்கப்பட்டன.

m

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் கே.சத்தியசீலன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகரசபையின் உறுப்பினர்கள் மற்றும் தீயணைப்புப் பிரிவின் பொறுப்பானர் வி.பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

m