மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டமையானது ஒரு அருவருப்பான செயல்!!

புதன் செப்டம்பர் 22, 2021

நாட்டில் மூடப்பட்டுள்ள மதுபானசாலைகளை திறக்குமாறு அரசாங்கம் உத்தி​யோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கலால் வரி திணைக்களமே தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துள்ளதாக அரசாங்கத் தரப்பினரால் பதிலளிக்கப்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில், அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சிகளில் ஒன்றான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறி​சேன,மதுபான நிலையங்களை திறப்பதற்கு உத்தரவு வழங்கியது யார் எனக் கேள்வியெழுப்பியதுடன் , அதனை திறக்க,பேய் அனுமதியளித்திருக்கலாம் என கிண்டல் செய்தார்.

மதுபான நிலையங்களை திறப்பதற்கு உத்தரவிட்டது யார் என்றக்கேள்விக்கு சரியான பதில் தெரியாவிட்டால் இதுவே பதிலாகும் எனவும் மைத்திரிபால சிறி​சேன கூறியுள்ளார்.

மேலும் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கத்திற்கு பணம் இல்லையெனவும் அதனாலேயே மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர்,மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டமையானது ஒரு அருவருப்பான செயல் என்றும் தெரிவித்தார்.